ஐ.எம்.எப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்: ஜனாதிபதியின் அழைப்பை ஏற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Colombo TNA Ranil Wickremesinghe Sri Lanka
By Rakesh Mar 10, 2024 11:59 PM GMT
Rakesh

Rakesh

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுமாறு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் கலந்துகொள்ளவுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவு தொடர்பில் ஜீவன் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவு தொடர்பில் ஜீவன் வெளியிட்ட தகவல்

விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11.03.2024) திங்கட்கிழமை எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஐ.எம்.எப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்: ஜனாதிபதியின் அழைப்பை ஏற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | Ranil Invite To Meet With Imf Representatives Tna

இந்தக் கலந்தரையாடலுக்காக எதிர்க்கட்சிகளுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் கலந்துகொள்வதில்லை எனத் தீர்மானித்துள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய அழைப்பை ஏற்று இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கத் தீர்மானித்துள்ளது.

கொந்தளித்த வெடுக்குநாறிமலை: டெல்லியின் முடிவு

கொந்தளித்த வெடுக்குநாறிமலை: டெல்லியின் முடிவு

ஏடன் வளைகுடாவில் பதற்றம்: சிங்கப்பூர் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

ஏடன் வளைகுடாவில் பதற்றம்: சிங்கப்பூர் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW