தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறைவடையும் :எதிர்வுகூறும் ரணில்
Ranil Wickremesinghe
Local government Election
Local government election Sri Lanka 2025
By Laksi
ஒரு சிறந்த ஜனநாயக நாட்டில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறைவாக காணப்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கைச் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இது தொடர்பில் மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |