பொதுமக்கள் அவதானம்! காலநிலை தொடர்பான அறிப்பு

Sri Lanka Weather
By Fathima May 02, 2023 03:20 AM GMT
Fathima

Fathima

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் (02.05.2023) பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுமக்கள் அவதானம்! காலநிலை தொடர்பான அறிப்பு | Rain In Many Places Today

மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்பு

மேல் மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என கூறப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடுவதுடன் மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாக அநிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பொதுமக்கள் அவதானம்! காலநிலை தொடர்பான அறிப்பு | Rain In Many Places Today

பிரதான நகரங்களுக்கான மழை குறித்து அறிவித்தல்

கொழும்பு - மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

கண்டி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

யாழ்ப்பாணம் - மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நுவரெலியா - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அனுராதபுரம் - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

மட்டக்களப்பு - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

காலி - மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இரத்தினபுரி - மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

திருகோணமலை - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மன்னார் - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். 

முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Joint Now