சம்பந்தன் காலமானார்: இறுதிக் கிரியை குறித்து வெளியான தகவல்
உடல் நலக் குறைவு காரணமாக நேற்று (30) இரவு உயிரிழந்த தமிழரசுக் கட்சியின் மூத்த பெரும் தலைவர் சம்பந்தனின் உடல் இறுதிக் கிரியைகளுக்காக சொந்த ஊரான திருகோணமலைக்கு கொண்டுச் செல்லப்படவுள்ளது.
அன்னாரின் உடல் கொழும்பில் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் நாடாளுமன்றத்திலும் ஒரு நாள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
அதன் பின்னர், சம்பந்தனின் உடல் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலாம் இணைப்பு
இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் நேற்று இரவு 11 மணியளவில் கொழும்பில் காலமானார்.
உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இரா.சம்பந்தன் தனது 91ஆவது வயதில் காலமானார்.
மேலும் சம்பந்தனின் இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரன் அவரது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |