அவசர பேரிடர் மையமாகும் ஆர்.பிரேமதாச மைதானம்! வெளியான முக்கிய அறிவிப்பு

Colombo Weather
By Fathima Nov 28, 2025 10:27 AM GMT
Fathima

Fathima

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானம் அவசர பேரிடர் மையமாக தயாராகி வருகிறது.

அதன்படி, தற்போது மூவாயிரம் பேர் கொண்ட குழுவிற்கு குறித்த மைதானம் அவசர பேரிடர் மையமாகத் தயாராகி வருகிறது.

நாட்டில் தற்போது நிலவி வரக்கூடிய வானிலையால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பேரழிவுகளைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீர் மட்டம் 

களனி கங்கை வரலாறு காணாத வகையில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் நாளைய தினம் (29.11.2025) தலைநகர் கொழும்பு முழுவதுமாக வெள்ள நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவசர பேரிடர் மையமாகும் ஆர்.பிரேமதாச மைதானம்! வெளியான முக்கிய அறிவிப்பு | R Premadasa Stadium As Emergency Disaster Center

இவ்வாறு களனி ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்தால் தலைநகர் கொழும்பின் கொழும்பு, கொலன்னாவ மற்றும் வத்தளை நகரசபைப் பிரிவுகள் இவ்வாறு வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானம் அவசர பேரிடர் மையமாகத் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.