அடுத்த வருடத்திற்குள் மாகாணசபை தேர்தல்: ஜனாதிபதி அறிவிப்பு
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Economy of Sri Lanka
Local government Election
By Laksi
மாகாணசபை தேர்தல்களை அடுத்த வருடத்திற்குள் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம்
அத்தோடு, உள்ளுராட்சி சபை தேர்தல்களையும் அடுத்த வருடத்திற்குள் நடத்துவதற்கு எண்ணியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜனாதிபதி, வலுவான அமைச்சரவை, நாடாளுமன்றம், மாகாணசபைகள், உள்ளுராட்சி சபைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வலுவான அரசியல் பொறிமுறை மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துயுர் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |