கல்முனையில் வசதி குறைந்த மாணவர்களுக்கு பாதணி வழங்கி வைப்பு

Sri Lankan Peoples Sri Lanka NGO Kalmunai School Incident
By Rakshana MA Feb 02, 2025 08:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்துக்குமான சபையின்(KDMC) ஏற்பாட்டில் வசதி குறைந்த 80 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலைக்கான பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த பாதணிகள் வழங்கி வைக்கும் நிகழ்வானது, நேற்று(01) கல்முனை மையோன் மாவத்தையில் அமைந்துள்ள மண்டபமொன்றில் கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்துக்குமான சபையின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி யு.எம்.நிசார் தலைமையில் இடம்பெற்றது.

டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை

டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை

மாணவர்களுக்கு பாதணி வழங்கி வைப்பு

அத்துடன் அமைப்பின் செயலாளர் ஏ.எல்.ஏ.மஜீட், உப தலைவர் மௌலவி இசட்.எம்.நதிர், பொருளாளர் எம்.ரி.எம்.நயீம், கணக்காய்வாளர் ஏ.எம்.எம். முஸ்தக்கீம், உதவிச் செயலாளர் எஸ்.எம். ஹாஜா ஆகியோர் உள்ளிட்ட அமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கல்முனையில் வசதி குறைந்த மாணவர்களுக்கு பாதணி வழங்கி வைப்பு | Providing Shoe Poor Students In Kalmunai

மேலும், இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ரி.எம்.எம்.அன்சார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

வாகன இறக்குமதிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி

வாகன இறக்குமதிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி

கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் காட்சிகளால் அதிர்ச்சியில் இஸ்ரேல்!

கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் காட்சிகளால் அதிர்ச்சியில் இஸ்ரேல்!

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery