கிராம சேவகர் மீதான தாக்குதலை கண்டித்து மட்டக்களப்பில் போராட்டம்

Batticaloa SL Protest Sri Lanka Police Investigation Crime
By Laksi Dec 30, 2024 08:08 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு (Batticaloa) -வாழைச்சேனையில் கடமை நிமித்தம் சென்ற கிராம உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியவர்களை கைது செய்ய கோரியும் சட்டத்தை நடைமுறைப்படுத்தாத பொலிஸாருக்கு எதிராகவும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது இன்று (30) ஐக்கிய கிராம சேவையாளர் சங்கத்தால் மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில்முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, நீதிவேண்டும், கைது செய் கைது செய், சமாதான அலுவல்களான எமக்கு என்ன பாதுகாப்பு, மக்கள் சேவையை செய்யும் எங்களை பொலிஸார் ஏன் புறக்கணிப்பு, பொலிசாரின் நடவடிக்கை தான் என்ன? தாக்கப்பட்ட கிராம உத்தியோகத்தருக்கு நீதி வேண்டும், அரசகாணி அரச வளங்களை பாதுகாக்கும் எங்களை பாதுகாப்பது யார?, போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு - கிழக்கு மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்க தயார்: ரவிகரன் எம்.பி

வடக்கு - கிழக்கு மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்க தயார்: ரவிகரன் எம்.பி

மகஜர் ஒன்றை கையளிப்பு

இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் மாவட்ட அபிவிருத்திகுழு தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திராவிடம் மகஜர் ஒன்றை கையளித்ததனர்.

கிராம சேவகர் மீதான தாக்குதலை கண்டித்து மட்டக்களப்பில் போராட்டம் | Protest In Batticaloa Village Service Association

இதன்போது, சம்பவம் தொடர்பி்ல் இன்று இருவரை கைது செய்துள்ளதாகவும் ஏனையவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய பொலிஸார் வலைவீசி தேடிவருவதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஏனையவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்ததையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து விலகி சென்றனர்.

இதேவேளை கடந்த 23 ம் திகதி கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டவர்களை கைது செய்யுமாறு கோரி கோறளைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பித்தக்கது.

வடக்கு - கிழக்கு மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்க தயார்: ரவிகரன் எம்.பி

வடக்கு - கிழக்கு மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்க தயார்: ரவிகரன் எம்.பி

மூதூர் - சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையம் நடாத்திய விருது வழங்கல் நிகழ்வு

மூதூர் - சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையம் நடாத்திய விருது வழங்கல் நிகழ்வு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW