வடக்கு - கிழக்கு மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்க தயார்: ரவிகரன் எம்.பி

Trincomalee Sri Lanka Politician Eastern Province Northern Province of Sri Lanka
By Laksi Dec 30, 2024 06:20 AM GMT
Laksi

Laksi

வடக்கு - கிழக்கு மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்பதற்கான உதவிகளை வழங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புலம்பெயர் உறவுகள் என அனைவரும் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T.Raviharan) தெரிவித்துள்ளார்.

 அத்தோடு, தற்போது வடக்கு, கிழக்கில் எமது மாணவர்களின் கல்வித்தரம் குறைவடைந்து செல்கின்ற நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலை - பத்தாம்குறிச்சியிலுள்ள கல்விநிலையமொன்றின் மாணவர்களுடன் இடம்பெற்ற கலந்துறையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அமைச்சர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அதிகரிப்பு

புதிய அமைச்சர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அதிகரிப்பு

மாணவர்களின் கல்வித்தரம்

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,“கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாணவர்களின் கல்வித்தரம் முன்னிலையில் இருந்தது.ஆனால் தற்போது வடக்கு, கிழக்கில் எமது மாணவர்களின் கல்வித்தரம் குறைவடைந்து செல்கின்ற நிலைகளைக் காண்கின்றோம். இந்த நிலை மாறவேண்டும்.

வடக்கு - கிழக்கு மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்க தயார்: ரவிகரன் எம்.பி | Ready To Help North East Students For Raviharan

எனவே அனைவரும் கல்விகற்கவேண்டும், சிறந்த பெறுபேறுகளைப் பெறவேண்டும், உயர்ந்த நிலைகளைப் பெறவேண்டும் என்பதே மாணவர்கள் அனைவரதும் ஒரே இலக்காக இருக்கவேண்டும்.

எமது மாணவர்கள் கல்வியில் பிரதேசம், மாவட்டம், மாகாணம் என்ற நிலைகளைக் கடந்து தேசிய ரீதியிலும் வெற்றி பெறவேண்டும்.

குறைக்கப்படும் பாடசாலை நாட்கள் : வெளியான அறிவிப்பு

குறைக்கப்படும் பாடசாலை நாட்கள் : வெளியான அறிவிப்பு

வடக்கு, கிழக்கு மாணவர்கள்

வடக்கு, கிழக்கு மாணவர்கள் தேசிய ரீதியில் முதல் நிலை பெற்றார்கள் என்ற நிலையை ஏன் ஏற்படுத்தமுடியாது. அது மாணவர்களான உங்களின் கைகளிலேயே இருக்கின்றது.

வடக்கு - கிழக்கு மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்க தயார்: ரவிகரன் எம்.பி | Ready To Help North East Students For Raviharan

இதேவேளை, கல்வியில் சிறந்து விளங்குவதைப்போல, ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கவேண்டும். வடக்கு, கிழக்குத் தமிழ் பிள்ளைகள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவர்கள் என்ற நிலையைக்கு கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு எமது மாணவர்கள் ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கும் போது எமது அடுத்தடுத்த சந்ததியினர் சிறந்து விளங்குவார்கள்” என துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

சீன அரசாங்கத்தின் உதவியுடன் மட்டக்களப்பில் நிவாரணம் வழங்கி வைப்பு

சீன அரசாங்கத்தின் உதவியுடன் மட்டக்களப்பில் நிவாரணம் வழங்கி வைப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW