கீரி சம்பா செய்கையை விரிவுபடுத்த திட்டம்

Mahinda Amaraweera Sri Lanka Economy of Sri Lanka
By Shalini Balachandran Jul 21, 2024 09:51 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

அடுத்த பருவத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 2000 ஏக்கர் கீரி சம்பா செய்கையை விரிவுபடுத்தவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், இம்முறை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லை கொள்வனவு செய்ய வேண்டும் என்பது அரசாங்கத்தின் உத்தரவு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெல் சந்தைப்படுத்தல் 

அத்தோடு, நெல் சந்தைப்படுத்தல் சபை கடன் வாங்காமல் சபைக்கு சொந்தமான பணத்தில் நெல்லை கொள்வனவு செய்வதாகவும் இதன் காரணமாக கடந்த இரண்டு பருவங்களிலும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு இலாபம் ஈட்ட முடிந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கீரி சம்பா செய்கையை விரிவுபடுத்த திட்டம் | Produce Samba In 2000 Acres

இதனுடன், இம்முறை நெல் சந்தைப்படுத்தல் சபை தமது பணத்தில் குறிப்பிட்ட அளவு நெல்லை கொள்வனவு செய்யும் எனவும் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW