இலங்கையில் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு சிக்கல்
வரி செலுத்துவதை உறுதி செய்வதற்காக அதிக வருமானம் பெறும் நபர்களை உன்னிப்பாக கண்காணிக்க உள்நாட்டு இறைவரி திணைக்களம் முடிவு செய்துள்ளது.
இதற்கமைய, அதிக வருமானம் பெறும் நபர்களை கண்காணிக்க தனி பிரிவொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரிவிற்கு மேலதிக அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் செபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
நூறு பேரின் சொத்து விபரங்கள்
இந்த நடவடிக்கையின் மூலம் அதிக சொத்துக்களை கொண்டவர்கள் தமது வருமானத்திற்கான சரியான வரி தொகையை செலுத்தி தமது பங்களிப்பை வழங்குகின்றார்களா என்பது உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய, அதிக வருமானம் பெறும் நூறு (100) பேர் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டு அவர்களின் வருமானச் சொத்துக்கள் மற்றும் வரி தாக்கல் என்பனவற்றை திணைக்களம் மதிப்பாய்வு செய்யும் என்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.