பொதுத்தேர்தல் : தேர்தல் ஆணையாளர் நாயகம் வெளியிட்ட அறிவிப்பு
எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்கு வசதியாக தனியார் துறை ஊழியர்களுக்கு தேவையான விடுமுறையை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க(saman sri ratnayake) அறிவித்துள்ளார்.
இதன்படி வேலை செய்யும் இடத்திலிருந்து வாக்குச் சாவடிக்கு 40 கி.மீ அல்லது அதற்கும் குறைவான தூரம் இருந்தால் ஒரு மணி நேரம் விடுமுறை அளிக்க வேண்டும்.
விடுமுறையின் வகை
40 முதல் 100 கிலோமீட்டர் வரை இருந்தால் ஒரு நாள் விடுமுறையும், 100 முதல் 150 கிலோமீட்டர் வரை இருந்தால் ஒன்றரை நாள் விடுமுறையும் அளிக்க வேண்டும் என்றார்.
பணிபுரியும் இடத்திலிருந்து வாக்களிப்பு நிலையத்திற்கு 150 கிலோ மீற்றருக்கு மேல் தூரம் இருந்தால் 02 நாட்கள் கடமை விடுப்பு வழங்கப்பட வேண்டுமென ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.