நாட்டின் சீரற்ற காலநிலையால் தனியார் வகுப்புக்கள் இடைநிறுத்தம்

Sri Lanka Sri Lankan Peoples Climate Change TN Weather Weather
By Rakshana MA Nov 26, 2024 10:34 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் தனியார் வகுப்புக்களுக்களை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இது அனர்த்த அபாய நிலைமையைக் கருத்திற் கொண்டு மாணவர்களின் நலன்கருதி 26 மற்றும் 27ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக மாநகர சபை ஆணையாளர் என்.எம்.நௌபீஸ், தனியார் கல்வி நிலையங்களின் நடத்துனர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவித்திருப்பதாவது,

இன்று ஆரம்பமாகியுள்ள உயர்தரப்பரீட்சை

இன்று ஆரம்பமாகியுள்ள உயர்தரப்பரீட்சை

சீரற்ற காலநிலை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் தாழமுக்க காலநிலை சீர்கேடு காரணமாக ஏற்படவுள்ள அனர்த்த அபாய நிலைமை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஆலோசனையின் பேரில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சீரற்ற காலநிலையால் தனியார் வகுப்புக்கள் இடைநிறுத்தம் | Private Classes Cancelled By Weather In Sri Lanka

அத்துடன் பலத்த மழை, வெள்ளம், அதிக காற்று மற்றும் அனர்த்தங்களினால் எமது மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதக விளைவுகள் மற்றும் அசெளகரியங்களை முழுமையாக தவிர்த்து அவர்களது நலன்கள் மற்றும் பாதுகாப்புக்கு நாம் பொறுப்புக் கூற கடமைப்பட்டிருக்கிறோம்.

ஆகையினால் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிலையங்களிலும் மேற்படி இரு தினங்களும் வகுப்புகளை இடைநிறுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு அவற்றின் நடத்துனர்கள் மற்றும் ஆசிரியர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

கிழக்கு நோக்கி நகரும் தாழ்வு மையம் : மக்களுக்கான எச்சரிக்கை

கிழக்கு நோக்கி நகரும் தாழ்வு மையம் : மக்களுக்கான எச்சரிக்கை

மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW