பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Sri Lankan Peoples Sri Lanka Inflation Economy of Sri Lanka Money Inflation
By Rakshana MA Mar 01, 2025 04:05 AM GMT
Rakshana MA

Rakshana MA

கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் இந்த வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

குறித்த விடயம் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ஏற்றுமதி துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையின் ஏற்றுமதி துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உணவு பணவீக்கம்

இதேவேளை கடந்த ஜனவரி மாதம் மறை 2.6 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் இந்த மாதம் மறை 0.2 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

ஜனவரி மாதத்தில் மறை 4.7 சதவீதமாக இருந்த உணவல்லா பணவீக்கம் இந்த மாதம் மறை 6.1 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்! | Primary Inflation Fall In Sri Lanka

மேலும் கடந்த ஜனவரி மாதத்தில் மறை 4 சதவீதமாக இருந்த கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் பெப்ரவரி மாதத்தில் மறை 4.2 சதவீதமாக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.   

வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று

வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று

திருகோணமலையில் வியாபாரிகளுக்கு தராசு வழங்கும் நிகழ்வு

திருகோணமலையில் வியாபாரிகளுக்கு தராசு வழங்கும் நிகழ்வு

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW