பல அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறைப்பு

Sri Lankan Peoples Lanka Sathosa Money Price
By Fathima Dec 29, 2025 05:35 AM GMT
Fathima

Fathima

லங்கா சதோச நிறுவனத்தால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இந்த பொருட்கள் இன்று (29) முதல் குறைந்த விலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து லங்கா சதோச விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ சிவப்பு பருப்பின் விலை 258 ரூபாய். 425 கிராம் டின் மீனின் விலை 450 ரூபாய்.

பொருட்களின் விலைகள் 

ஒரு கிலோ காய்ந்த மிளகாய் விலை ரூ.895. ஒரு கிலோ பயறு விலை 645 ரூபாய்.

பல அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறைப்பு | Prices Reduced For Consumer Goods

ஒரு கிலோ உள்ளூர் முந்திரி பருப்பு விலை ரூ.1,150. ஒரு கிலோ கௌப்பி விலை 920 ரூபாய்.

ஒரு கிலோ ரொட்டி மாவின் விலை 153 ரூபாய். ஒரு கிலோ பூண்டின் விலை 450 ரூபாய். ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை 410 ரூபாய்.

ஒரு கிலோ பாஸ்மதி அரிசியின் விலை ரூ.625 ஆகும். ஒரு கிலோ வெள்ளை நாட்டு அரிசியின் விலை 218 ரூபாய்.

ஒரு கிலோ சிவப்பு பச்சரிசியின் விலை 206 ரூபாய். ஒரு கிலோ வெள்ளை பச்சரிசியின் விலை 204 ரூபாய்.

ஒரு கிலோ கொத்தமல்லி விலை 370 ரூபாய். இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ ஸ்ப்ராட்ஸின் விலை 850ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.