இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

Food Shortages Sri Lanka Economy of Sri Lanka
By Laksi Jul 23, 2024 10:11 AM GMT
Laksi

Laksi

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை பரிசோதித்து வெளியிடுவதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த தகவலை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர் சங்கத்தின்  தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.

அத்தோடு, 40 அடி கொள்கலனில் பல வகையான பொருட்களை இறக்குமதி செய்யும் போக்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விலைகள் அதிகரிக்கும் அபாயம்

இந்தநிலையில், எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக சனத் மஞ்சுள சுட்டிக்காட்டியுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல் | Prices Of Imported Goods Will Increase

இதேவேளை, 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் துறைமுக அதிகார சபையுடன் தொடர்புடைய சுமார் 20,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW