பால் தேநீரின் விலை குறைப்பு!

Sri Lanka Sri Lankan Peoples Price
By Fathima Jan 16, 2026 05:02 AM GMT
Fathima

Fathima

ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை இன்று (16) இரவு முதல் நடைமுறையாகும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பால் தேநீர் விலை

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை இன்று முதல் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் காரணமாகவே, பால் தேநீர் விலையையும் இவ்வாறு குறைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால் தேநீரின் விலை குறைப்பு! | Price Of Milk Tea

எனவே அனைத்து சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்களும் தற்போது கிடைக்கப்பெறும் இந்த சலுகையினை வாடிக்கையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் ஹர்ஷ ருக்ஷான் வலியுறுத்தியுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மா பொதியானது 125 ரூபாவினாலும், 400 கிராம் பொதியொன்றின் விலையை 50 ரூபாவினாலும் இன்று முதல் குறைப்பதற்கு இறக்குமதியாளர்கள் இணக்கம் வௌியிட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.