வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி நான்... புகைப்படம் வெளியிட்ட ட்ரம்ப்

Donald Trump United States of America
By Fathima Jan 12, 2026 06:16 AM GMT
Fathima

Fathima

வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி நான் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அவருடைய ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடக தளத்தில், ஒரு புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார். அது விக்கிபீடியாவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் போன்று காட்சியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய புகைப்படம் 

ஆனால் அதில், அமெரிக்காவின் 45-வது மற்றும் 47-வது ஜனாதிபதி என்றும் வெனிசுலாவின் பொறுப்பு (தற்காலிக) ஜனாதிபதி என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி நான்... புகைப்படம் வெளியிட்ட ட்ரம்ப் | Trump Posts Photo Of Venezuela S Interim President

எனினும், சர்ச்சைக்குரிய இந்த பதிவுக்கு வேறு எதுவும் தலைப்பு வைக்கவோ அல்லது வேறு எந்த தகவலையோ ட்ரம்ப் பகிரவில்லை.

வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள் மீது ட்ரம்ப் குறி வைத்திருக்கும் நிலையில், இந்த பதிவு வெளிவந்துள்ளது.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட பின்னர், இந்த மாத தொடக்கத்தில், நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக டெல்சி எலோய்னா ரோட்ரிக்ஸ் முறைப்படி பதவியேற்று கொண்டார்.