வெளிநாடுகளில் இருந்து பயங்கரவாத குழுக்களுக்கு வந்த உத்தரவு! ஈரான் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
வெளிநாடுகளில் இருந்து பயங்கரவாத குழுக்களுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அபாஸ் அரக்சி குற்றம் சாட்டியுள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆயுதங்கள்
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,'' பொலிஸார் இல்லாத நேரங்களில், போராட்டக்காரர்களையும் பாதுகாப்பு படையினரையும் சுட உத்தரவு வழங்கப்பட்டதாகக் கூறினார்.

இதனிடையே, தீவிரவாதிகள் பயன்படுத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கைப்பற்றியதாக ஈரான் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்த ஆயுதங்கள் பல வீடுகளில் மறைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது.
கடுமையான நடவடிக்கை
இதேவேளை, ஈரான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், போருக்கு தயார்.'' என தெரிவித்துள்ளார்.

ஈரானில் நடைபெறும் போராட்டங்களை தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.
மேலும், இணைய சேவை துண்டிப்பு பயங்கரவாத நடவடிக்கைகளை கண்டறிந்த பின்னரே மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் விளக்கம் அளித்துள்ளது.
இந்த கலவரங்களுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் காரணம் என ஈரான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.