பேரீச்சம் பழத்தின் நன்மைகள்
ஆண், பெண், சிறுவர், சிறுமியர், வயோதிகர் அனைவரும் அவசியம் சாப்பிட வேண்டிய சத்து நிறைந்த பழம் பேரீச்சை, அரபு தேச பாலைவன வெப்ப மண்டலத்தில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய பேரீச்சையில் வைட்டமின்களும், கனிமசத்துக்களும் நிறைந்துள்ளன.
வைட்டமின்கள் பி1, பி2, பி3, ஏ1, சி மற்றும் புரதச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் மட்டுமின்றி இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், சர்க்கரை போன்ற சத்துக்களும் அபரிமிதமாக காணப்படுகின்றன.
குறிப்பாக பேரீச்சையில் உள்ள சர்க்கரை எளிதில் உடம்பில் சேரக்கூடியது என்பதால் உடனடி சக்தியும். தெம்பும் தரக்கூடியது.
* பேரீச்சை பழம் மனிதத் தசையை வலுப்படுத்துகிறது, இதனால்தான் நோன்பு துறப்பவர்கள், விரதத்தை நிறைவு செய்பவர்கள் இதனை கொண்டு நோன்பு துறக்கிறார்கள், விரதத்தை முடிக்கிறார்கள்.
* எலும்புகளின் வளர்ச்சிக்கு உரியது
* குடல் பகுதியில் உள்ள கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றுகிறது.
* புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்கவல்லது.
* நோய்த்தொற்று, இரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாகுதல் ஆகியவற்றிற்கு எதிராக செயல்படக்கூடியது

* கண்பார்வை கோளாறை நீக்குகிறது
* குடல் ஆரோக்கியத்திற்குரியது
* சரும நலன் காக்கவல்லது.
* இரத்த இழப்பை ஈடுகட்டவும், சிவப்பணுக்கள் அதிகரிக்கவும் உதவுகிறது.
* மலச்சிக்கல் பிரச்சனை தீர்கிறது
* வாதம், பித்தம், மூட்டுவீக்கம் குணமாகிறது
* வயிற்றுக்கடுப்பு, அஜீரணபேதி, அமீபியா கோளாறுகள் நீங்குகின்றன.
* உடலுக்கு தெம்பூட்டுகிறது
* குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்கி்றது.
* முதியோரை தாக்கும் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
* இளைப்பு நோயை குணப்படுத்துகிறது.
* ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை குறைக்கிறது.
* 45 முதல் 52 வயது காலகட்டத்தில் பெண்களின் எலும்புகள் பலவீனமாகும். கை, கால், மூட்டுவலி ஏற்படும், இவற்றிற்கு உதவுகிறது.
* நரம்புத்தளர்ச்சி நீங்குகிறது
* ஞாபகசக்தி அதிகரிக்கிறது.
* அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன.
* ரத்தக்குழாய் அடைப்பு நீங்குகிறது
* தாம்பத்தியம் மேம்பட உதவுகிறது.
* கருவுற்ற தாய்மார்களுக்கு சுகப்பிரசவம் ஏற்பட உதவுகிறது.
* முதியோர்களுக்கு வரும் பல்வேறு இன்னல்களை நீக்குகிறது.