ஈரான் விவகாரம்! அமெரிக்காவை எச்சரித்த கட்டார்

United States of America Qatar Iran World
By Fathima Jan 14, 2026 06:32 AM GMT
Fathima

Fathima

ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இதில் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பெரும் போர் வெடிக்கும் என்று கட்டார் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதிரடி நடவடிக்கை

டோகாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கட்டார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜித் அல்-அன்சாரி, "ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அது மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தும். பெரும் போர் வெடிக்கும்.

ஈரான் விவகாரம்! அமெரிக்காவை எச்சரித்த கட்டார் | Qatar Warns Us Attacks Iran

தூதரக ரீதியிலான அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்

முன்னதாக, போராட்டக்காரர்கள் கொலை செய்யப்பட்டால், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுக்கும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

ஆனால், ட்ரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் இவ்வாறு தக்க பதிலடி கொடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.