கனமழை பெய்யக்கூடும்...! வானிலை குறித்து வெளியான முன்னறிவிப்பு

Department of Meteorology Climate Change Weather
By Fathima Jan 13, 2026 05:43 AM GMT
Fathima

Fathima

வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கனமழை 

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.

கனமழை பெய்யக்கூடும்...! வானிலை குறித்து வெளியான முன்னறிவிப்பு | Today Weather Forecast Sri Lanka 13 01 2026

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் மூடுபனி நிலவும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.