கவலைகளும் கடன்களும் நீங்கிட ஓத வேண்டிய துஆ
அபூஈசத் அல்குத்ரீ(ரளி) அவர்கள் கூறுகி்ன்றார்கள், ஒருநாள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குள் வந்தார்கள்.
அப்போது அன்ஸாரிகளுள் ஒருவர் அங்கே இருந்தார். அவருக்கு அபூ உமாமா என்று பெயர்.
நபி(ஸல்) அவர்கள், ”அபூஉமாமாவே தொழுகை நேரம் அல்லாத வேறு நேரத்தில் பள்ளியில் நீங்கள் அமர்ந்திருப்பதை நான் காணுகின்றேனே? என்ன விஷயம்?” என்று கேட்டார்கள்.
அவர், ”அல்லாஹ்வின் தூதரே! கவலைகளும் கடன்களும் என்னை பிடித்துக்கொண்டன” என்று கூறினார்.

நபி(ஸல்) அவர்கள் ”நான் உனக்கு ஒரு வாக்கியத்தை கற்றுத்தரட்டுமா? அதை நீ கூறினால் மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ் உனது கவலையை நீக்கி உனது கடனை நிறைவேற்றிவிடுவான் என்று கேட்டார்கள்.
அவர் ஆம்(கற்றுத் தாருங்கள்) அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார்.
நீர் காலையிலும் மாலையிலும்
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் ஹம்மி வல்ஹுஸ்னி வஅஊது பிக மினல் அஜ்ஸி வல்கஸலி வஅஊது பிக மினல் ஷூப்னி வல்புக்லி வஅஊது பிக மின் ஃகலபதித்தைனி வகஹ்ரிர் ரிஷாலி
பொருள்
இறைவா! நான் உன்னிடம் கவலை, சோகம், ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு கோருகிறேன். மேலும் சோம்பல், இயலாமை ஆகியவற்றில் இருந்தும் பாதுகாப்பு கோருகிறேன்.
மேலும் கோழைத்தனம், கஞ்சத்தனம் ஆகியவற்றில் இருந்தும் பாதுகாப்பு கோருகிறேன். மேலும் கடன் மிகைப்பதை விட்டும் மனிதர்களின் அடக்குமுறையை விட்டும் பாதுகாப்பு கோருகிறேன்.
அபூஉமாமா(ரளி) அவர்கள் கூறுகின்றனார்கள். இவ்வாறு நான் செய்தேன். மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ் எனது கவலையை நீக்கி எனது கடனை நிறைவேற்றிக்கொடுத்தான்.