இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை! அரசாங்கத்தின் தீர்மானம்

Anura Kumara Dissanayaka Vijitha Herath Sri Lanka Government Of Sri Lanka Presidential Update
By Rakshana MA Dec 22, 2024 08:27 AM GMT
Rakshana MA

Rakshana MA

புதிய அரசியலமைப்பின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுப்போம் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு : பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்!

நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு : பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்!

புதிய அரசியலமைப்பு

தொடர்ந்தும் தெரிவிக்கையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பான யோசனை புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படும்.

புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குகின்ற ஒரு முறைக்கு செல்வதையே நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளோம்.

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை! அரசாங்கத்தின் தீர்மானம் | Presidential System With Executive Powers In Lanka

எனவே நாம் அதனை செய்வோம். இதேவேளை, தற்போது மக்கள் எதனை கோருகின்றனர் என்பது தெளிவானது. பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளியே வர வேண்டும்.

மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அரசாங்கமாக நாங்கள் இன மற்றும் மதவாதத்திற்கு எதிராக செயற்படுகின்றோம். அந்த நம்பிக்கை மக்களுக்கு இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பு : சட்டவிரோதமான மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை

பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பு : சட்டவிரோதமான மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW