ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் வேட்பாளர் யார்..! மகிந்த அமரவீர வெளியிட்டுள்ள தகவல்

Srilanka Freedom Party Sri Lanka Podujana Peramuna
By Mayuri Jul 29, 2024 04:48 AM GMT
Mayuri

Mayuri

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் வேட்பாளர் யார் என்பதை எதிர்வரும் 31ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இதேவேளை இன்றையதினம் தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

வேட்பாளர் தீர்மானம்

இன்று இடம்பெறவுள்ள அரசியல் குழுக் கூட்டத்தின்போது, வேட்பாளரை தீர்மானிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

[D9MJ8I ]

அதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ரஜபக்சவிற்கும் இடையில் நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW