புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தை நிறுத்தப்போவதில்லை! ஜனாதிபதி அதிரடி

Anuradhapura Anura Kumara Dissanayaka Harini Amarasuriya Education
By Fathima Jan 09, 2026 11:18 AM GMT
Fathima

Fathima

புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தை எக்காரணத்தைக் கொண்டும் நாம் நிறுத்தப்போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

'Rebuilding Sri Lanka' வேலைத்திட்டத்தின் கீழ் அனர்த்தம் காரணமாக முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணித்தல் ஆரம்ப நிழ்வு இன்று (09.01.2026) அனுராதபுரத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.

கல்வி மறுசீரமைப்பு

மேலும் பேசிய அவர், நீண்ட காலமாக கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் பலவாறான கருத்தாடல்கள் இருந்தது.நாங்கள் அந்த புதிய கல்வி மறுசீரமைப்புக்கு கை வைத்தது மாத்திரம் தான் அவதூறுகளும் அவமதிப்புக்களும் செய்யப்படுகின்றன.

புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தை நிறுத்தப்போவதில்லை! ஜனாதிபதி அதிரடி | President Statment About Education Reforms

மேலும் அர்த்தமற்ற காரணங்களை முன்வைத்து கல்வி மறுசீரமைப்பை நிறுத்துவதற்கு பாரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.யாரு என்ன சொன்னாலும் புதிய கல்வி மறுசீரமைப்பை நிறுத்தப் போவதில்லை.

இலங்கை வரலாற்றில் 2025 ஆம் ஆண்டிலே பொருளாதாரத்தின் பல அபிவிருத்திகளை பெற்றுக் கொண்ட சந்தர்ப்பமாகும்.அரசாங்கத்தின் வருமானம் அதிகரிப்பு மற்றும் வரவு செலவுத் திட்டத்தின் குறைந்தளவான துண்டுவிழும் தொகை ('வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை')1977 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட குறைந்தளவான துண்டுவிழும் தொகையாகும்.

அத்தோடு அதிகளவான உல்லாச பயணிகளின் வருகை,அதிகமான வருவாயை பெற்றுக் கொண்டு பொருளாதாரத்தில் அபிவிருத்தியை கைப்பற்றிய சந்தர்ப்பத்திலே 'டித்வா' எம்மை தாக்கியது.

அவ்வாறான இயற்கை அனர்த்தங்களுக்கும் முகம் கொடுக்கும் நிலையை நாம் கொண்டிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.