மாத்தறையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கான தீர்வுகளை வழங்க பணிப்புரை

Matara Sri Lanka Sri Lankan Peoples Floods In Sri Lanka
By Rakshana MA Nov 09, 2024 08:52 AM GMT
Rakshana MA

Rakshana MA

மாத்தறை நில்வலா உப்புத் தடுப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குக்கான காரணங்களை கண்டறிந்து உடனடி தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் வைத்தியர் நந்திக சனத் குமாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (08) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை முன்வைத்துள்ளார்.

மாத்தறை நில்வலா ஆற்றில் கட்டப்பட்டுள்ள உப்பு நீர் தடுப்பு, அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பதற்கு காரணமாக இருப்பதாகவும், விளைச்சல் நிலங்களுக்குள் கடல்நீர் வருவதால், பயிர்கள் சேதமடைவதாகவும் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

முறைப்பாடுகள் குறித்து விளக்கமளித்துள்ள நிஹால் தல்துவ

முறைப்பாடுகள் குறித்து விளக்கமளித்துள்ள நிஹால் தல்துவ

ஆய்வுகளை மேற்கொண்டு தீர்வு

இதனை தொடர்ந்து, மாத்தறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதற்கு முறையான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும், நீர்ப்பாசனம் மற்றும் நீர்வழங்கல் சபை இணைந்து வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் வைத்தியர் நந்திக சனத் குமாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

மாத்தறையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கான தீர்வுகளை வழங்க பணிப்புரை | President Orders Flood Solutions For Matara

அத்துடன், இதற்கான பரிந்துரைகளை தயாரிக்குமாறு ஆலோசனை வழங்கிய அவர், பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவினால் மேற்கொள்ளப்படும் ஆய்வறிக்கையின் அடிப்படையில் அதற்கான தீர்வை வழங்குமாறும், அந்தப் பணிகளை திட்டத்தின் இரண்டாம் கட்டமாக நடைமுறைப்படுத்துமாறும் மேலும், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டுக் கோரிக்கையை சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து, கட்டப்பட்ட உப்புத் தடுப்பால் விவசாய நிலங்களுக்குள் உப்பு நீர் வருவதைப் போல வெள்ளச் சூழல் ஏற்படுமா என்பதற்கு முறையான ஆய்வுக்குட்படுத்திய பிறகு நிரந்தரத் தீர்வுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

முறையான ஆய்வுக்கான ஒப்புதல்

இதற்காக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவின் ஆதரவைப் பெற்று இது தொடர்பான முறையான ஆய்வுகளை மேற்கொண்டு தீர்வுகளை முன்வைக்க ஜனாதிபதியின் செயலாளர் ஒப்புதல் வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மாத்தறையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கான தீர்வுகளை வழங்க பணிப்புரை | President Orders Flood Solutions For Matara

மாத்தறை நில்வலா ஆற்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உப்புத் தடுப்பினால் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி ஊடகப் பிரிவு, வயல்களுக்குள் உப்பு உட்புகுவதால் பயிர்கள் சேதமடைவதற்கான உண்மைகளையும் முன்வைத்துள்ளது.

மேலும், மாத்தறை பிரதேசத்தில் ஏற்படும் வெள்ளப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு இதன்போது அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காத மக்களுக்கு வெளியான அறிவித்தல்

அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காத மக்களுக்கு வெளியான அறிவித்தல்

இஸ்ரேல் ஈரான் மோதலில் உள்ளே வரும் ஈராக்

இஸ்ரேல் ஈரான் மோதலில் உள்ளே வரும் ஈராக்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW