ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று(12) மாலை கிண்ணியா நகர சபை மைதானத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவே எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்படுகிறது.
கடந்த காலங்களில் திகன, மாவனல்லை என பல பிரச்சினைகள் உருவாகியது. ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிபீடமேறி ஆறு மாதங்களே அவ்வாறான பிரச்சினைகள் இல்லாமல் வாழ்கிறீர்கள்.
இனவாதம் இல்லாத நாடு
அனைவரும் நாட்டை கட்டியெழுப்ப ஒற்றுமையாக பயணிக்க வேண்டியுள்ளது எனவே தான் இம்முறை தேர்தலில் கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை அதிகாரத்தை தேசிய மக்கள் சக்திக்கு வழங்குங்கள்.
அம்பாறையில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவானார்கள்.
நால்வரும் சிங்கள சமூகத்தை சேர்ந்தவர்கள் இதனை கருத்திற் கொண்டு தேசிய மக்கள் சக்தி கட்சி தீர்மானத்துக்கு அமைவாக ஆதம்பாவை தேசிய பட்டியல் ஊடாக கொடுத்து முஸ்லிம் சமூகத்தை கௌரவப்படுத்தியுள்ளோம்.
இனவாத பிரச்சினைகளை இந்த நாட்டில் உருவாக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது .
ஈஸ்டர் தாக்குதல்
2019இல் ஈஸ்டர் தாக்குதலால் 250க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதுடன் 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். இதனால் முஸ்லிம் சமூகம் பெரும் துன்பத்தை எதிர்கொண்டார்கள்.
அதேபோல கடந்த கால ஆட்சியாளர்கள் நாட்டை நாசப்படுத்தியுள்ளார்கள் எரிபொருள் இல்லை, எரிவாயு இல்லை, கடன் சுமை என பல இடர்களை சந்தித்தது தற்போது பொருளாதாரத்தை மீட்டுள்ளோம்.
இதனையடுத்து அரச சேவையை மீள் எழுச்சி பெறவும் மக்களுக்கு திறந்த சேவைகளை வழங்கவும் அரசாங்க துறையில் சம்பள உயர்வை ஏற்படுத்தியுள்ளோம் ரூபா 38000 பெற்ற ஒருவர் ரூபா 63000 வரை பெறுகிறார் ரூபா 54000 பெற்ற வைத்தியர் ரூபா 94000 பெறுகிறார் இதற்காக இந்தவருடம் 11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும் 30000 உத்தியோகத்தர்களை அரச துறையில் ஆட்சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது போன்று அரசாங்க கொடுப்பனவுகளான அஸ்வசும நலன்புரி சேவை, முதியோர், சிறு நீரக கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு இலட்சம் புதிய அஸ்வெசும பயனாளர்களை இணைக்கவுள்ளோம் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




