வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கே ஆதரவு: ரிஷாட் பதியுதீன் அறிவிப்பு

Risad Badhiutheen Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 13, 2024 10:29 AM GMT
Laksi

Laksi

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தொடர்ந்தும் இழுத்தடித்துக்கொண்டிராமல், இதனை முடிவுக்குக்கொண்டு வரும் ஒருவரை நாம் தெரிந்தெடுப்பது பொருத்தமானது என மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தலைமையுடன் நட்பையும் உறவுகளையும் கொண்டிருப்பதைக் காரணமாக வைத்து எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவு வழங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது தொடர்பில், கடந்த 10,11,12 ஆகிய தினங்களில் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற, மக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் கலந்துரையாடல்களின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் பயணிகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் பயணிகள்

மக்களின் கருத்து

இது குறித்து ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில், சுமார் நான்கரை வருடகால ஆட்சியில் நமது சமூகம் எதிர்கொண்ட இன்னல்களை நாம் மறந்துவிட முடியாது.

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கே ஆதரவு: ரிஷாட் பதியுதீன் அறிவிப்பு | President Election Rishad Bathiudeen

அதேபோன்று, எதிர்க்கட்சியில் நாம் இருந்தவேளை, கட்சியின் ஆதரவாளர்களுக்கும் தலைமைக்கும் ஏற்படுத்திய துன்பங்கள் மறக்கமுடியாதவை.

கொழும்பிலே தலைமையும் கட்சியும் முடிவெடுத்த பின்னர், மக்களிடம் வந்து ‘இந்த வேட்பாளரைத்தான் ஆதரியுங்கள்’ என்று நாம் கூறவில்லை. இதற்கு மாற்றமாக மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னர், ஆலோசனையின் அடிப்படையில் நாம் முடிவுகளை மேற்கொள்வோம்.

மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ள பிரேமலால் ஜயசேகர

மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ள பிரேமலால் ஜயசேகர

நாட்டின் எதிர்காலத் தலைவர்

இனங்களுக்கிடையிலான நல்லுறவுக்கு எந்த வேட்பாளர் வித்திடுகின்றாரோ, அவரை நாம் தெரிவுசெய்ய உழைப்போம். இனவாதத்தைத் தூண்டி அதில் குளிர்காய நினைப்போரை அடக்குவதற்கான முறையான சட்டங்களை உருவாக்கும் ஆட்சியாளரையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கே ஆதரவு: ரிஷாட் பதியுதீன் அறிவிப்பு | President Election Rishad Bathiudeen

இதுவொரு இக்கட்டான சூழலாகவும் வித்தியாசமான தேர்தலாகவும் இருப்பதனால், நாம் தீர்க்கமான முடிவை மேற்கொள்வதே பொருத்தமானது.

நாட்டின் பொருளாதாரத்தை சீரிய முறையில் முன்கொண்டு செல்பவராகவும் கைத்தொழில் மேம்பாட்டில் அக்கறைகொண்டவராகவும் நாட்டின் எதிர்காலத் தலைவர் இருக்க வேண்டும்.

அத்துடன், முறையான வெளிநாட்டுக்கொள்கையை அவர் பின்பற்ற வேண்டும். பலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டுமென்ற கோட்பாட்டையும் எதிர்காலத் தலைமை மேற்கொள்ள வேண்டும். இவற்றைதான் நமது கட்சி முன்வைக்கிறது என ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடுக்காட்டில் ஆசிரியரை இறக்கிவிட்டுச் சென்ற பேருந்து!

மட்டக்களப்பில் நடுக்காட்டில் ஆசிரியரை இறக்கிவிட்டுச் சென்ற பேருந்து!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW