நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் தேர்தலை அறிவிக்கலாம்! வெளியாகியுள்ள தகவல்

Election Commission of Sri Lanka Election
By Mayuri Jul 21, 2024 03:18 AM GMT
Mayuri

Mayuri

தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும், ஜனாதிபதித் தேர்தலை அறிவிப்பதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ள அதிகாரத்தை அது பாதிக்காது என அந்த ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார். 

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இரு தேர்தல்களையும் எதிர்கொள்ளும் இயலுமை

அத்துடன், ஒரே நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்படுமாயின் அதனை எதிர்கொள்வதற்கான இயலுமை உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் தேர்தலை அறிவிக்கலாம்! வெளியாகியுள்ள தகவல் | President Election In Sri Lanka

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW