சிறப்பு விமானம் மூலம் நாட்டிலிருந்து வெளியேறிய ஜனாதிபதி அநுர
இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான AI தாக்க சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்று முன்னர் (17) சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.
இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அநுரகுமார திசாநாயக்கவை உத்தியோகபூர்வமாக அழைத்திருந்தார்.
அதன்படி, ஜனாதிபதி உள்ளிட்ட குழு இன்று பிற்பகல் 2.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் புது டல்லிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-195 மூலம் புறப்பட்டது.
முக்கிய கலந்துரையாடல்கள்
மனிதகுலத்தின் நலனுக்காக செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் பயன்படுத்தும் நோக்கில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறும் என்றும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க 19ஆம் திகதி மாநாட்டில் உரையாற்ற உள்ளார் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் 45இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எதிர்காலப் பாதை மற்றும் உலகளாவிய சவால்களை சமாளிக்க அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்தும் இந்த மாநாடு விரிவாக விவாதிக்கும்.
இந்த இந்திய விஜயத்தின் போது, ஜனாதிபதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் நடத்தவுள்ளார்.