அநுரவின் திட்டங்களுக்கு ரணில் தரப்பில் இருந்து வந்த ஆதரவு

Anura Kumara Dissanayaka Namal Rajapaksa Ranil Wickremesinghe Rohitha Abeygunawardana Sri Lanka Podujana Peramuna
By Rakshana MA Nov 23, 2024 02:21 PM GMT
Rakshana MA

Rakshana MA

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) முன்வைத்துள்ள கொள்கை பிரகடனம் மிகச் சிறந்தது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன(Rohitha Abeygunawardena) தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று(22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் நடைமுறைக்கு சாத்தியமான பல திட்டங்களை அவர் முன்வைத்துள்ளார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வித ஆடம்பரங்களுமின்றி மிக எளிமையாக நாடாளுமன்றிற்கு வருகைத் தந்த பிரதமர்

எவ்வித ஆடம்பரங்களுமின்றி மிக எளிமையாக நாடாளுமன்றிற்கு வருகைத் தந்த பிரதமர்

நாட்டு மக்களின் தெரிவு

தொடர்ந்தும் தெரிவிக்கையில், களுத்துறை மாவட்ட மக்களுக்கு இயலுமான வகையில் சேவையாற்றியுள்ளேன். மக்களுடன் மக்களாக ஒன்றிணைந்து செயற்பட்டுள்ளதால் சவால்மிக்க தருணத்திலும் மக்கள் என்னை தெரிவு செய்துள்ளார்கள்.

எனக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

அநுரவின் திட்டங்களுக்கு ரணில் தரப்பில் இருந்து வந்த ஆதரவு | President Anura S New Plans 2024 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்வைத்துள்ள கொள்கை பிரகடனம் சிறந்தது. நடைமுறைக்கு சாத்தியமான பல திட்டங்களை முன்வைத்துள்ளார்.

நாட்டுக்கு நன்மை பயக்கும் சிறந்த திட்டங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

அநுர அரசாங்கத்தின் தீர்மானம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எனது சகோதரர் போன்றவர். எதிர்க்கட்சியாக செயற்படுவது குறித்து கலந்துரையாடியுள்ளோம். ஆட்சியில் இருப்பதும், எதிர்க்கட்சியில் இருப்பதும் எமக்கு புதியதொரு விடயமல்ல.

கட்சி என்ற ரீதியில் வேறுபட்டிருந்த ரணில் விக்ரமசிங்கவுடன் நாட்டுக்காக கைகோர்த்த நாங்கள் எமது அரசியல் கட்சியான பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் ஒன்றிணைவது பாரியதொரு விடயமல்ல.

அநுரவின் திட்டங்களுக்கு ரணில் தரப்பில் இருந்து வந்த ஆதரவு | President Anura S New Plans 2024

அரசியலில் நெடுநாள் நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை.

நாட்டின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம். நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

36 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலக்காக கொண்டு பயணிக்கும் புதிய அரசாங்கம்!

36 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலக்காக கொண்டு பயணிக்கும் புதிய அரசாங்கம்!

வடக்கை வெற்றி பெற்ற அனுரவுக்கு சீன தூதரின் மகிழ்ச்சி பகிர்வு

வடக்கை வெற்றி பெற்ற அனுரவுக்கு சீன தூதரின் மகிழ்ச்சி பகிர்வு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW