2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை இறுதிப்படுத்துவதற்கான கலந்துரையாடல்

Anura Kumara Dissanayaka Economy of Sri Lanka Budget 2025
By Amal Feb 14, 2025 09:27 AM GMT
Amal

Amal

2025 பெப்ரவரி 17 ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை(Budget) இறுதிப்படுத்துவதற்கான, முதற்கட்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்  நடைபெற்றது.

விரிவான கருத்தாடல்

இந்தக் கலந்துரையாடலில் விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, வர்த்தக, வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க, தொழிலாளர் மற்றும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.

2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை இறுதிப்படுத்துவதற்கான கலந்துரையாடல் | Preliminary Discussions To Finalize The Budget

மேலு்ம், ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் பல மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன்போது பாதீட்டின்; உள்ளடக்கங்கள் குறித்து விரிவான கருத்தாடல்கள் இடம்பெற்றுள்ளன.