சுனாமி ஷுஹதாக்கள் நினைவாக நினைவேந்தல் நிகழ்வுகள்!
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த ஷுஹதாக்களை நினைவுகூரும் வகையில், மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பினால் இன்று (26.12.2025) நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, சுனாமியில் மரணித்த ஷுஹதாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட சம்மாந்துறை முஅல்லா மஹல்லா பள்ளிவாசல் மற்றும் மையவாடி வளாகத்தில் துஆ பிரார்த்தனையுடனான மார்க்க உபனியாசம் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து சிரமதானப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
சுனாமி
இந்த நிகழ்வுகளுக்கான முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கிய சம்மாந்துறை செந்நெல் கிராமம் அரபா மஸ்ஜித் பேஸ் இமாம் அஷ் ஷேஹ் பிர்தௌஸ் மௌலவி, சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை, சம்மாந்துறை முஅல்லா மஹல்லா நிர்வாகிகள் மற்றும் பேஸ் இமாம் அஷ் ஷேஹ் அனீஸ் அஹமட் (முப்தி), மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பேஸ் இமாம் அஷ் ஷேஹ் ஏ.எல்.எம்.மின்ஹாஜ் (உஸ்மானி ) ஆகியோருக்கும், ஜாமிஆ றவ்ழதுஸ் ஸாலிஹீன் அரபுக்கல்லூரி உஸ்தாத் அஸ்ஸேஹ் அல்ஹாபிழ் றியாஸ் (அல்தாபி) மற்றும் அவருடைய மாணவர்களுக்கும் இதன்போது அமைப்பின் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

மேலும், மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் நலன்விரும்பிகள், நன்கொடையாளர்கள், சம்மாந்துறை முஅல்லா பள்ளிவாசல் மஹல்லா வாசிகள், சம்மாந்துறை உதவும் கரங்கள் அமைப்பினர்கள், ஊடகவியலாளர்கள், அவசியமான நேரங்களில் தாமாக முன்வந்து வாகன வசதிகள் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கும் நலன்விரும்பிகள், அதேபோல் சம்மாந்துறை வாழ் பொதுமக்கள் அனைவருக்கும் அமைப்பின் சார்பிலும், கரையோரப் பிரதேச மக்களின் சார்பிலும் இதன்போது நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நினைவேந்தல் நிகழ்வு, சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த ஷுஹதாக்களை நினைவுகூர்வதோடு, சமூக ஒற்றுமை மற்றும் மனித நேயத்தை வலியுறுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.