சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வு

Sri Lankan Peoples Hospitals in Sri Lanka Eastern Province Doctors
By Rakshana MA Jan 26, 2025 10:35 AM GMT
Rakshana MA

Rakshana MA

சாய்ந்தமருது (Sainthamaruthu) பிரதேச வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வும் வருடாந்த ஒன்றுகூடலும் இடம்பெற்றுள்ளது.

குறித்த வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி சனூஸ் காரியப்பர் தலைமையில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில், சாய்ந்தமருது வைத்தியசாலையில் கடமையாற்றி இடமாற்றம் செய்யப்பட்ட ஊழியர்கள் மற்றும் சேவையிலிருந்த ஒய்வு பெற்றுச் செல்பவர்கள் என அனைவருக்கும் பாராட்டி, பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல்

கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல்

பாராட்டும் கௌரவிப்பும் 

அத்துடன் பாடசாலைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்திய வைத்தியசாலை நலன்புரி சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளும் அதிதிகளினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டதுடன், ஊழியர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட கலை, கலாசார நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றுள்ளது.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வு | Praise For Service Rendered To The Health Sector

மேலும், இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகீலா இஸ்ஸதீன் பிரதம அதிதியாகவும், பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சீ.எம்.மாஹிர், பிராந்திய சுகாதார தகவல் முகாமைத்துவ பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஐ.எம்.முஜீப், பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ஐ.எம்.எஸ்.இர்ஷாத் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு!

சாய்ந்தமருதுவில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 92 மாணவர்கள் சாதனை

சாய்ந்தமருதுவில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 92 மாணவர்கள் சாதனை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW    


GalleryGalleryGalleryGallery