தென்னாப்பிரிக்காவில் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Earthquake
Africa
By Fathima
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று இன்று (11.06.2023) பதிவாகியுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இதன்போது ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள பல கட்டிடங்கள் குலுங்கியுள்ளதுடன் இதுவரை சேதம் குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ஆகஸ்ட் 2014 இல், ஜோகன்னஸ்பர்க் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.