கடல் போன்ற பாவங்கள் மன்னிக்கப்பட வழி
ஹஜ்ரத் அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒருவர் ஒவ்வொரு பர்ளு தொழுகைக்கு பிறகும் முப்பத்து மூன்று தடவை சுப்ஹானல்லாஹ், முப்பத்து மூன்று தடவை அல்ஹம்துலில்லாஹ், முப்பத்து மூன்று தடவை அல்லாஹ் அக்பர் ஓதினால் அவை 99 தடவை ஆகின்றன, நூறை பூர்த்தியாக்க
”லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்”
என ஓதி முடித்தால், அவருடைய பாவங்கள் கடல் நுரை போன்றிருந்தாலும் மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்.
பாவங்கள் மன்னிக்கப்படுவது பற்றி முன்னால் பல ஹதீஸ்களில் விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. மன்னிக்கப்படும் பாவங்கள் சிறிய பாவங்கள் தாம் என்பதாக உலமாக்கள் எழுதியுள்ளனர்.
இந்த ஹதீஸில் மூன்று கலிமாக்கள் ஒவ்வொன்றையும் 33 தடவை லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு என்பதை ஒரு தடவை ஓத வேண்டுமென்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹீ அக்பர் ஆகிய ஒவ்வொன்றையும் 33 தடவை ஓதிவர வேண்டுமென எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என ஜைது(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
