தபால் மூல வாக்கெடுப்பிற்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Election
By Kamal Aug 05, 2024 02:04 AM GMT

தபால் மூல வாக்கெடப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறவைடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக இவ்வாறு தபால் மூல வாக்கெடுப்பிற்கான விண்ணப்பங்கள் இன்று நள்ளிரவு 12.00 மணி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

தபால் மூல வாக்கெடுப்பிற்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு | Postal Vote Application Closing Date

கடந்த வெள்ளிக்கிழமை வரையில் 14 வேட்பாளர்கள் தேர்தலில் ஜனாதிபதி போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் கால அவகாசம் எதிர்வரும் 14ம் திகதி நண்பகலுடன் பூர்த்தியாகின்றது.

தபால் மூலம் வாக்களிப்பு செய்வோர் இன்று நள்ளிரவிற்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.