குறுஞ்செய்தி மூலமாக பாரிய மோசடி

By Fathima Mar 14, 2024 11:17 AM GMT
Fathima

Fathima

எஸ்.எம்.எஸ்.களின் (SMS) மூலம் வங்கிக் கணக்கு அல்லது வங்கி அட்டை விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மோசடி சம்பவம் குறித்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

வங்கி அட்டை விபரங்களை மோசடி 

மோசடி செய்பவர்கள் வங்கி அட்டை விபரங்களை மோசடி மூலம் திருடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தபால், இலங்கை தபால் திணைக்களம், SL Post போன்ற அடையாளங்களையும், திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் போன்ற இணையத்தளத்தையும் பயன்படுத்தி இந்த மோசடி மேற்கொள்ளப்படுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

குறுஞ்செய்தி மூலமாக பாரிய மோசடி | Postal Department Issues Alert On Sms Parcel

தாம் குறுஞ்செய்தி மூலம் வங்கி விவரங்களைக் கோருவதில்லை என்றும் பொதி அனுமதிக்கு வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்வதில்லை என்றும் தபால் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.

மோசடி செய்பவர்கள் அனுப்பும் போலி எஸ்.எம்.எஸ்.களின் அடிப்படையில் தங்கள் வங்கிக் கணக்கு அல்லது வங்கி அட்டை விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்