வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கத் தவறிய கொழும்பு துறைமுக நகரம்

Port of Colombo Sri Lanka Economic Crisis China Economy of Sri Lanka Dollars
By Fathima Apr 23, 2023 08:52 AM GMT
Fathima

Fathima

சீனாவின் முதலீட்டிலான "போர்ட் சிட்டி" என்ற கொழும்பு துறைமுக நகரம் இன்னும் முதலீட்டை ஈர்க்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பொறுத்தவரையில் பூஜ்ஜிய நிலையே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வணிகங்கள் மற்றும் முயற்சிகளுக்கு வழங்கப்பட வேண்டிய சட்டப்பூர்வ சலுகைகள் மற்றும் விலக்குகளை அரசாங்கம் இன்னும் வர்த்தமானியில் வெளியிடாமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கத் தவறிய கொழும்பு துறைமுக நகரம் | Port City Unable To Attract Foreign Investors

வெளிநாட்டு முதலீட்டாளர்

போர்ட் சிட்டியில் கடைசியாக பிரவுன்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிஎல்சி நிறுவனம், 2021 டிசம்பரில் நிலம் ஒன்றின் 99 வருட குத்தகைக்காக 99 ஆண்டு 114 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 86 மில்லியன் அமெரிக்க டொலர்களை வளர்ச்சிக்காக செலவிடுவதாக நிறுவனம் கூறியுள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கத் தவறிய கொழும்பு துறைமுக நகரம் | Port City Unable To Attract Foreign Investors

ஆனால், இந்த திட்டங்களில் எவ்வித முன்னேற்றங்களும் இல்லை.

குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சந்தைப்படுத்தக் கூடிய சலுகைகள் மற்றும் விலக்குகள் இல்லாததால் இந்த நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.