நள்ளிரவில் கொழும்பு துறைமுக பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு! 8 பேர் வைத்தியசாலையில்

Colombo Sri Lanka Colombo Hospital Sri Lanka Police Investigation
By Fathima May 02, 2023 12:06 AM GMT
Fathima

Fathima

கொழும்பு துறைமுகம் ஊடாக செல்கின்ற அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்குள் சிலர் அத்துமீறி பிரவேசிக்க முயற்சித்த 08 பேர் மீது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நேற்று (01.05.2023) துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 04 பெண்கள் உட்பட 08 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கரையோரப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நள்ளிரவில் கொழும்பு துறைமுக பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு! 8 பேர் வைத்தியசாலையில் | Port City Of Colombo Gun Shooting

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் புளூமெண்டல் பகுதியை சேர்ந்த ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பு துறைமுகத்தின் 06வது வாயிலுக்கு அருகில் உள்ள துறைமுகத்தில் இரும்பு திருட வந்த இருவரிடம் விசாரணை நடத்துவதற்காக குழுவொன்று சம்பவ இடத்திற்கு  வந்த போது அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது பாதுகாப்பு உத்தியோகத்தரிடமிருந்து நபரொருவர் துப்பாக்கியைப் பறிக்கச்சென்ற நிலையில் மற்றுமொரு பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  

முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Joint Now