இனவாதத்தை முன்னிலைப்படுத்தும் அரசியல்வாதிகள் : எழுந்துள்ள குற்றச்சாட்டு

Wimal Weerawansa Udaya Gammanpila NPP Government
By Faarika Faizal Oct 07, 2025 07:28 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் போலியான விடயங்களை சமூகமயப்படுத்த முயற்சிக்கும் போது அந்த விடயங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு முன்னிலையாக வேண்டும் எனவும் இவர்கள் இனவாதத்தை முன்னிலைப்படுத்தியே செயற்படுகிறார்கள் எனவும் தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (06.10.2025) கொழும்பில் நடைபெற்ற மத நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, "இழந்த அரசியல் செல்வாக்கை மீண்டும் கைப்பற்ற முயற்சிக்கிறார்கள்.

அஞ்சல் துறைக்குள் மோசடி : வெளிப்படுத்திய அஞ்சல் அதிபர்

அஞ்சல் துறைக்குள் மோசடி : வெளிப்படுத்திய அஞ்சல் அதிபர்

நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள்

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலின் போது தேர்தலில் போட்டியிடாமலயே தோல்வியை அறிந்து விலகிக் கொண்டவர்கள் இன்று தேசப்பற்றாளர்கள் போல் பேசுகிறார்கள். இந்த நாடு இனவாதத்தால் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. அதற்கு இவர்கள் பொறுப்புக்கூற வேண்டும்.

இனவாதத்தை முன்னிலைப்படுத்தும் அரசியல்வாதிகள் : எழுந்துள்ள குற்றச்சாட்டு | Politics By Highlighting Racism

உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோர் இன்றும் கடந்த அரசாங்கம் தான் ஆட்சியில் உள்ளது என்று நினைத்துக் கொண்டு செயற்படுகிறார்கள்.

போலியான விடயங்களை சமூகமயப்படுத்த முயற்சிக்கும் போது அந்த விடயங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அவர்கள் முன்னிலையாக வேண்டும்.

இனவாதத்தை முன்னிலைப்படுத்தி இழந்த அரசியல் செல்வாக்கை மீண்டும் கைப்பற்ற இவர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால் நாட்டு மக்கள் இதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள்.

மக்கள் மத்தியில் தவறான விடயத்தை சமூகமயப்படுத்த இடமளிக்க முடியாது" என்றும் தெரிவித்துள்ளார்.

காசா அமைதி திட்டத்தில் மாற்றங்கள் தேவையில்லை..! ட்ரம்ப் திட்டவட்டம்

காசா அமைதி திட்டத்தில் மாற்றங்கள் தேவையில்லை..! ட்ரம்ப் திட்டவட்டம்

இவ்வருடம் இதுவரை இலஞ்சம் தொடர்பில் 4500 முறைப்பாடுகள் பதிவு

இவ்வருடம் இதுவரை இலஞ்சம் தொடர்பில் 4500 முறைப்பாடுகள் பதிவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW