இவ்வருடம் இதுவரை இலஞ்சம் தொடர்பில் 4500 முறைப்பாடுகள் பதிவு

Sri Lanka Sri Lankan Peoples Bribery Commission Sri Lanka
By Rakesh Oct 06, 2025 07:55 AM GMT
Rakesh

Rakesh

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலஞ்சம் பெறுதல் சம்பவங்கள் தொடர்பாக, 4500 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இந்தக் காலப் பகுதியில் 4626 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேடுதல் நடவடிக்கை

இந்த முறைப்பாடுகளுக்கு அமைய, 85 தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வருடம் இதுவரை இலஞ்சம் தொடர்பில் 4500 முறைப்பாடுகள் பதிவு | 4500 Complaints Regarding Bribery So Far This Year

கைது செய்யப்பட்டவர்களில், பெரும்பாலானோர் பொலிஸ் அதிகாரிகள் என்றும் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.