வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்வு: முன்னாள் எம்.பியின் கோரிக்கை

Tamils Vavuniya Suresh Premachandran Eastern Province Northern Province of Sri Lanka
By Laksi Jan 06, 2025 09:15 AM GMT
Laksi

Laksi

வடக்கு - கிழக்கு இணைந்த ஒரு மாநிலமாக தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை புதிய அரசாங்கம் உருவாக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா- கோவில்குளம் பகுதியில் நேற்று(05) இடம்பெற்ற ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நடந்து முடிந்த தேர்தல் தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் இரண்டு தடவை இணைய வழி ஊடாக கலந்துரையாடியுள்ளோம்.

சமூக வலைத்தளங்களில் வெளியான மற்றொரு பரீட்சை வினாத்தாள்

சமூக வலைத்தளங்களில் வெளியான மற்றொரு பரீட்சை வினாத்தாள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல்

அத்தோடு, வரவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடியதுடன்  ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியை கிராம மட்டங்களில் பலப்படுத்தல் தொடர்பாகவும் பல்வேறுபட்ட ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்வு: முன்னாள் எம்.பியின் கோரிக்கை | Political Settlement Of North Eastern Peoples

முக்கியமாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியாக தற்போது அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் போட்டியிடும்.

திறைசேரி உண்டியல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்

திறைசேரி உண்டியல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்

தமிழ் கட்சி

அத்துடன் எம்முடன் இணைந்து பயணிக்கக் கூடிய ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளுடனும் பேசி அவர்களும் இணங்கும் பட்சத்தில் இணைந்து போட்டியிடவுள்ளோம்.

வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்வு: முன்னாள் எம்.பியின் கோரிக்கை | Political Settlement Of North Eastern Peoples

மேலும், வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியப் பரப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழ் கட்சிகளுடன் இது தொடர்பில் பேசுவதாகவும் தீர்மானங்களை எடுத்துள்ளோம்” என்றார்.

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW