அசர்பைஜானில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பாதாளஉலக குழு தலைவர்
பிரபல பாதாள உலகக்குழு தலைவர் ஒருவர் அசர்பைஜானிலிருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் மற்றும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரராக கருதப்படும் மனோஜ் சுரங்க எனப்படும் 'படுவத்தே சாமர' நேற்றிரவு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
அசர்பைஜான் நாட்டில் தங்கியிருந்த இவர், அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், அங்கிருந்து நாடுகடத்தப்பட்டதையடுத்து கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தேக நபர் மீது பாரியளவிலான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.