விழுந்து நொறுங்கிய போர் விமானம் - விமானிக்கு நேர்ந்த துயரம்

Viral Video Poland Flight
By Raghav Aug 29, 2025 07:20 PM GMT
Raghav

Raghav

போலந்தில் விமானப்படையின் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

போலந்து நாட்டில் விமான கண்காட்சிக்காக ஒத்திகையில் ஈடுபட்ட F-16 போர் விமானமே இவ்வாறு தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் போர் விமானத்தின் விமானி உயிரிழந்துள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்து

விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி 31 வது தந்திரோபாய விமான தளத்தை சேர்ந்தவர் ஆவார்.

மாலை 5:30 மணியளவில் விழுந்த இந்த விபத்தில் வேறு யாரும் காயமடையவில்லை என போலந்து தேசிய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், விபத்துக்கு முன்னதாக F-16 விமானம் பீப்பாய் சுழற்சி அடிப்பதையும், தரையில் விழும் காட்சிகளும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.