அரகல போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கும் திஸ்ஸ குட்டியாராச்சி

Sri Lanka Podujana Peramuna
By Mayuri Aug 07, 2024 11:05 AM GMT

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்புமனுக்களை பெறுவதற்காக அரகல போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நெலும் மாவத்தை கட்சியின் தலைமையகத்தில் இன்று (06) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அனைவரும் எதிர்பார்க்கும் இளம் தலைவரை முன்னிறுத்தி நாட்டை வழிநடத்தத் தயார்.

இளம் தலையினருக்கு பொறுப்பு

போராட்டத்தின் போது இந்த நாட்டிலுள்ள அனைவரும் இளம் தலைவருக்கு இந்த நாட்டை கொடுங்கள் என்று சொன்னார்கள். இப்போது எமது கட்சி மிகவும் சுத்திகரிக்கப்பட்ட கட்சி.

அரகல போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கும் திஸ்ஸ குட்டியாராச்சி | Podujana Peramuna Called The Aragala Leaders

போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இளைஞர்கள் எங்களிடம் வந்து வேட்புமனுக்களை பெற்றுக் கொள்ளுங்கள். இளைஞர்கள் அதிகமாக இருக்கும் கட்சி எங்கள் கட்சியாகும் என குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW