கட்டார் அரச குடும்பத்தினரை சந்தித்து இரங்கல் தெரிவித்த பிரதமர் ஹரிணி

Prime minister Qatar World
By Sajithra Jul 16, 2026 01:20 AM GMT

மறைந்த முன்னாள் ஷேக் ஹமட் பின் கலீபா அல்-தானியின் மறைவுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் இரங்கல் தெரிவித்துள்ளார்.  

கட்டாருக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய, ஜூலை 15ஆம் திகதி அல் வஜ்பா அரண்மனைக்கு சென்றுள்ளார். 

அங்கு, கட்டார் நாட்டின் அமீரின் தாயாரும் கட்டார் அறக்கட்டளையின் தலைவியுமான ஷேக்கா மோசா பின்ட் நாசரிடம் பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.