கிரிக்கெட் போட்டியின் போது திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்து வீரர் உயிரிழப்பு

Kalutara Cricket
By Dhayani Jul 06, 2026 03:03 AM GMT

களுத்துறை - பேருவலையில் உள்ள ஒரு பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கிரிக்கெட் போட்டியின் போது திடீரென மயங்கிவிழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பாடசாலையின் பழைய மாணவரான 46 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காணாமல்போன பௌத்த துறவியின் எலும்புக்கூடு கண்டெடுப்பு - அடர்ந்த காட்டில் மீட்கப்பட்ட பொருட்கள்

காணாமல்போன பௌத்த துறவியின் எலும்புக்கூடு கண்டெடுப்பு - அடர்ந்த காட்டில் மீட்கப்பட்ட பொருட்கள்

 

மரணத்திற்கான காரணம்

குறித்த வீரர் துடுப்பாட்டம் செய்துகொண்டிருந்தபோது திடீரென தரையில் சரிந்து விழுந்த நிலையில், உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் போட்டியின் போது திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்து வீரர் உயிரிழப்பு | Player Dies After Beruwala Cricket Match

மாரடைப்பால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டாலும், அதற்கான சரியான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இதன் காரணமாக போட்டியின் மீதமுள்ள ஆட்டங்களை உடனடியாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆட்டமிழக்காமல் ஓட்டங்கள் குவிப்பு

இந்த சம்பவம் வீரர்கள், அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள, ஏற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நேரத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருந்த நேரலை காட்சிகளில், இந்த சம்பவத்திற்கு முன்பு அவர் மூன்று பந்துகளில் ஆட்டமிழக்காமல் ஆறு ஓட்டங்களை எடுத்திருந்தமை தெரியவந்துள்ளது. 

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் வெளியான தகவல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் வெளியான தகவல்

ஐக்கிய மக்கள் சக்தியில் ஆதிக்கம் செலுத்தும் குற்றக்கும்பல்: விசாரணைகளில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்..

ஐக்கிய மக்கள் சக்தியில் ஆதிக்கம் செலுத்தும் குற்றக்கும்பல்: விசாரணைகளில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்..