நடுவானில் மோதிய விமானங்கள்- 4 பேர் உயிரிழப்பு

World
By Nafeel May 02, 2023 01:13 AM GMT
Nafeel

Nafeel

2 இலகுரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. ஒரு விமானம் விமான நிலையத்தின் அருகே மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்து தீப்பற்றியது. மாட்ரிட்: வடகிழக்கு ஸ்பெயினில் பார்சிலோனா நகரின் வடக்கே அமைந்துள்ள மோயா நகர விமான நிலையம் அருகே 2 இலகுரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இதில் ஒரு விமானம் விமான நிலையத்தின் அருகே மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்து தீப்பற்றியது.

அந்த விமானத்தை முதலில் மீட்புக் குழுவினர் கண்டுபிடித்து தீயை அணைத்தனர். அந்த விமானத்தில் பயணித்த இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். அதன்பின்னர் நீண்ட தேடுதல் பணிக்கு பிறகு இரண்டாவது விமானத்தை கண்டுபிடித்தனர்.

அதில் பயணித்த 2 நபர்களும் உயிரிழந்தனர். 2 விமானங்களும் நடுவானில் மோதிக் கொண்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.